பிரான்ஸ் தொழிலதிபரை விமானநிலையத்தில் கைது செய்த பொலிசார்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தொழிலதிபரான Alexandre Djouhri-ஐ கடந்த 7ம் திகதி ஹீத்ரு விமானநிலையத்தில் பிரித்தானியா பொலிசார் கைது செய்துள்ளனர்.

மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுக்காக பிரான்ஸ் அதிகாரிகள் உத்தரவிட்டதன் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் பிரான்சின் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோசிக்கும், லிபியாவின் சர்வாதிகாரியும், முன்னாள் பிரதமருமான கடாபிக்கும் இடையில் இடைத்தரகராக செயல்பட்டிருப்பதாக கூறி சந்தேகத்தின அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு நடந்த பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், கடாபியிடம் இருந்து நிக்கோலஸ் சர்கோசி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் கைது செய்யப்பட்ட Alexandre Djouhri நேற்று வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்