வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்தினால் லைசென்ஸ் ரத்து

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக பிரான்ஸ் அரசாங்கம் வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்துசெய்வதைக் குறித்து பரிசீலித்து வருகிறது.

வேக வரம்பை மணிக்கு 90 கி.மீட்டரிலிருந்து 80 கி.மீட்டராக குறைக்க உள்ள அரசு, வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்தி பிடிபடும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதங்கள் ரத்துசெய்ய விரும்புகிறது.

ஆனால், இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில், அதாவது ஒரு பள்ளியை அல்லது பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடத்தினருகே வரும்போது, மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பிரான்சின் சாலை பாதுகாப்பு அமைப்பின் ஆய்வின்படி, சாலை விபத்துக்களில் 10 சதவிகிதம் மொபைல் பயன்படுத்துபவர்களால் மட்டுமே ஏற்படுகிறது.

தற்போது பிரான்சில் வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது, இதற்குத் தண்டனையாக 135 யூரோக்களும் மூன்று அபராதப் புள்ளிகளும் அபராதமாக விதிக்கப்படுகின்றன.

2015ஆம் ஆண்டில் மட்டும் 3 லட்சம் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டில் மட்டும் 3469 இறப்புகள் சாலை விபத்தினால் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்