பிரான்சில் பொதுமக்களை கவர்ந்த பாண்டா கரடி

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்சில் முதன்முறையாக பிறந்த பாண்டா கரடி ஐந்து மாதங்களுக்கு பின்னர் பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.

மத்திய பிரான்சின் Beauval zoo-ல் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாண்டா கரடிக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 4ம் திகதி முதன்முறையாக பாண்டா குட்டி பிறந்தது.

இக்குட்டிக்கு Yuan Meng என ஜனாதிபதியின் மனைவி டிசம்பரில் பெயர் சூட்டினார்.

இந்நிலையில் ஐந்து மாதங்களுக்கு பின்னர் நேற்று முதன்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.

REUTERS

பார்வையாளர் ஒருவர் கூறுகையில், நாங்களும் வரலாற்று நிகழ்வில் கலந்து கொண்டோம், இதற்காக காலை 3 மணிக்கே எழுந்து வந்தோம், என் மகன் பாண்டா குட்டியை பார்க்க ஆவலாக இருந்தான் என தெரிவித்துள்ளார்.

பாண்டா குட்டியை பார்க்க நாளுக்கு நாள் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

REUTERS

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்