பிரான்சில் அகதிகளுக்கிடையே மோதல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் நால்வர்

Report Print Athavan in பிரான்ஸ்
303Shares
303Shares
lankasrimarket.com

வடக்கு பிரான்ஸ் துறைமுக நகரமான Calais-ல் எரித்திரன் மற்றும் ஆப்கான் மக்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நான்கு பேர் குண்டடிபட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

வெவ்வேறு நாடுகளான எரித்ரியா மற்ரும் ஆப்கன் நாட்டுகளை சேர்ந்த மக்களுக்கு இடையே பிற்பகல் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.

மேலும் 12 பேர் படுகாயங்களும் 2 பேர் சாதாரண காயமும் ஏற்பட்டுள்ளது, பாதிக்கபட்டவர்களின் இந்த எண்ணிக்கை மேலும் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரித்ரியா நாட்டை சேர்ந்த 200கும் மேற்பட்டவர்களால் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை அச்சுருத்தி தாக்கியுள்ளனர், துப்பாக்கிசூடும் நடந்துள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட ஆப்கன் குடியேற்ற மக்களுக்கு பிரான்ஸ் பொலிஸ் தற்போது பாதுகாப்பு அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் உள்துறை மந்திரி ஜெரார்ட் காம்போம் வியாழக்கிழமை மாலை துப்பாக்கிசூடு நடைபெற்ற Calais பகுதிக்கு சென்று பார்வையிட்டு சூழலை ஆய்வு செய்வார் என பிரான்ஸ் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calais மாகாண பகுதியில் வேற்று நாட்டை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட குடியேறியவர்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தாலும், மனித உரிமை குழுக்கள் தெரிவிக்கும் எண்ணிக்கையானது 800 ஆக உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்