வழக்கத்திற்கு மாறான உடையில் பொதுவெளியில் வந்த பிரான்ஸ் ஜனாதிபதி மனைவி

Report Print Raju Raju in பிரான்ஸ்
507Shares
507Shares
lankasrimarket.com

ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மனைவி பிரிஜ்ஜிட் வழக்கத்துக்கு மாறான உடையில் சென்று மக்களை கவர்ந்துள்ளார்.

மேக்ரான் இல்லாமல் தனியாக ஆப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் சென்றுள்ள பிரிஜ்ஜிட் பல்வேறு இடங்களுக்கு சென்று பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் செனேகல் நாட்டில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு பிரிஜ்ஜிட் சென்றார். அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடம் அவர் உரையாடினார்.

எப்போதும் இல்லாத வகையில் பிரிஜ்ஜிட் கோட் சூட் உடையணிந்திருந்தார். பச்சை நிற சூட்டும், உள்ளே வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்த பிரிஜ்ஜிட் கழுத்தில் துணி ஒன்றை கட்டியிருந்தார்.

பொதுவாக குட்டை பாவாடை போன்ற உடைகளை அதிகம் அணியும் பிரிஜ்ஜிட் இந்த உடையை அணிந்திருந்த நிலையில் மக்களை அது பெரிதும் கவர்ந்தது.

பள்ளி வளாகத்தில் இருந்தவர்கள் பிரிஜ்ஜிடுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்