கடுமையான பனிப்பொழிவு: மூடப்பட்டது உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர்

Report Print Athavan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் கடுமையான பனிப்பொழிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, சீனா, அமெரிக்கா என உலகம் முழுதும் கடுமையான பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

பிரான்ஸிலும் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் வெண்மை போர்த்தப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது.

நாள் ஒன்றுக்கு 6 இன்ச் வரை கொட்டும் பனியால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கடந்த 35 ஆண்டுகளாக பிரான்ஸ்-ல் இல்லாத வரலாறு காணாத பனிப்பொழிவு ஆகும்.

பனிப்பொழிவு காரணமாக பாரிஸ் நகரில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது, இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடுமையான பனிப்பொழிவால் பாரிஸ் நகரில் நேற்று முன்தினம் 700 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குவிக்கப்பட்டு சாலையோரம் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பனியோடு கடுமையான குளிரும் நிலவி வருவதால் வீடில்லாமல் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு எமர்ஜென்சி குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

46 எமர்ஜென்சி ஷெல்டர்கள் திறக்கப்பட்டுள்ளன, இதில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்