குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிரான்ஸ் வீரர்

Report Print Kabilan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் மார்ட்டின் போர்கடே, குளிர்கால ஆண்களுக்கான பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

தென் கொரியாவில் பியாங்சாங் நகரில், 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

நேற்று நடந்த ஆண்களுக்கான 12.5 கிலோ மீட்டர் தூர பனிச்சறுக்கு போட்டியில், பிரான்ஸ் வீரர் மார்ட்டின் போர்கடே தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதற்கு முன்பு, கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும், மார்ட்டின் போர்கடே தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்