மீண்டும் மூடப்பட்ட ஈபிள் கோபுரம்: பாரிஸ் மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Harishan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பாரிஸில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் ஈபிள் கோபுரம் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

மேற்கு பிரான்ஸின் Île-de-France மாகாணம் மற்றும் பாரிஸ் நகரம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று மீண்டும் கடும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நாட்டின் மூன்றாவது உச்சகட்ட எச்சரிக்கையான "Yellow Alert" விடுக்கப்பட்டிருந்தது.

அப்போது ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக நாட்டின் அடையாளச் சின்னமாக திகழும் ஈபிள் கோபுரம் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

இந்த கோபுரத்தை காண வருடாவருடம் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்