பாரிசில் கண்ணில்பட்டவர்களை கத்தியால் குத்திய போதை ஆசாமி: சுற்றிவளைத்த பொலிசார்

Report Print Harishan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பாரிஸில் சாலையில் சென்று கொண்டிருந்த நபர்களை கத்தியால் குத்திய போதை ஆசாமியை பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் 18th Arrondissement பகுதியில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில் அந்த பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த நபர்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீர் தாக்குதலில் இறங்கியுள்ளார்.

அப்போது தான் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து கண்ணில் பட்டவர்களை சரமாரியாக குத்திய அந்த நபர் தலைமறைவாகியுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 6 நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், சிசிடிவி கமெராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் உதவியோடு தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுற்றிவளைத்த பொலிசார், அவரை கைது செய்து தீவிரவாத உள்நோக்கமா என்ற கோணங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த மர்மநபர் கத்தியால் குத்திய 6 நபர்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்