ஒலிம்பிக்கில் வீராங்கனையின் மேலாடை விலகியதால் பரபரப்பு

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் பிரான்ஸ் சார்பில் பனிச்சறுக்கு நடனப்போட்டியில் பங்கேற்ற வீராங்கனையின் மேலாடை விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேப்ரில்லா பபாடாகிஸ் (22) என்ற வீராங்கனை தனது ஜோடியான குயிலுமி சிசிரோனுடன் சேர்ந்து பனிச்சறுக்கு நடனப்போட்டியில் பங்கேற்றார்.

இருவரும் ஆட தொடங்கிய சில நிமிடங்களில் கேப்ரில்லாவின் மேலாடை விலகியது.

ஆனால் அதை சமாளித்தவாறு அவர் குயிலுமியுடன் நடனமாடி முடித்தார்.

போட்டிக்கு பின்னர் கேப்ரில்லா கூறுகையில், உடை விலகியதால் எனக்கு கவனச்சிதறல் ஏற்பட்டது.

ஆனால் அதை சமாளித்து முன்னேற வேண்டும் என எனக்குள்ளேயே நான் சொல்லி கொண்டேன், இந்த நிலையிலும் திறமையான செயல்திறனை வெளிப்படுத்தியது பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் தென் கொரிய வீராங்கனை யுரா மின்னின் மேலாடை இதே போல போட்டியின் போது விலகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்