பொலிஸ் வேடமணிந்து நூதன முறையில் 500,000 யூரோக்கள் கொள்ளை

Report Print Harishan in பிரான்ஸ்
183Shares
183Shares
lankasrimarket.com

பிரான்ஸில் பொலிஸ் வேடமணிந்து வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர் 500,000 யூரோக்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

பிரான்ஸின் val-de-marne பகுதியில் வயது முதிர்ந்த தம்பதியர்(வயது 90,89) தனியே வசித்து வந்துள்ளனர்.

கடந்த 24-ஆம் திகதியன்று பொலிஸ் வேடமணிந்து வந்த நபர் ஒருவர் சோதனை என்ற பெயரில் குறித்த தம்பதியரின் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.

கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள வந்துள்ளதாக கூறிய அந்த நபரிடம், தங்களிடம் இருந்த பணம் மற்றும் உடமைகளை குறித்த தம்பதியினர் காண்பிக்க, அதனை அந்த நபர் மொத்தமாக கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த நபர் கொள்ளையடித்துச் சென்ற பொருட்களின் மொத்த மதிப்பு 500,000 யூரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்