பிரான்சில் பனிச்சரிவின் காரணமாக 4 பேர் பலி: காணாமல் போனவரை தேடும் மீட்பு படையினர்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்சின் தென் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவின் காரணமாக 4 பனிச்சறுக்கு வீரர்கள் பலியாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகே உள்ள ski resort of Entraunes அருகே இன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.00 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் நான்கு பனிச்சறுக்கு வீரர்கள் பலியாகியிருப்பதுடன், ஒருவர் காணமல் போயிருப்பதாகவும், இன்னொருவர் காயமுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த குளிர்காலத்தில் மட்டும் மிகவும் மோசமான பனிச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதாகவும், கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை இந்த பனிச்சரிவின் காரணமாக 16 பேர் இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்