மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு TV வேண்டாம்: பிரான்ஸ் அறிவுரை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு TV வேண்டாம் என்பது உட்பட பல மருத்துவ அறிவுரைகளைக் கொண்ட "Health Book" ஒன்றை பிரான்ஸ் அரசாங்கம் வரும் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.

பிரான்சில் 2006 ஆம் ஆண்டு முதல் ஒரு குழந்தை பிறந்தவுடன் மருத்துவர் அல்லது அந்தக் குழந்தை பிறந்த வார்டில் உள்ள ஊழியர்கள் குழந்தையின் பெற்றோருக்கு ஆலோசனைகளை வழங்கக்கூடிய ஒரு மருத்துவக் கையேட்டை வழங்குவது வழக்கம்.

தற்போது ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு அந்த புத்தகத்தில் பல புதிய விடயங்கள் சேர்க்கப்பட்டு புதிய மருத்துவக் கையேடு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.

அந்தக் கையேட்டில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள்:
  • மூன்று வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் தொலைக்காட்சி, மொபைல் மற்றும் ஐ பேடுகளை பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை வளரும் குழந்தையின் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
  • முன்பு diphtheria, tetanus மற்றும் polio ஆகிய நோய்களுக்கு மட்டும் கட்டாய தடுப்பூசி போடப்பட்டது. ஜனவரி 1க்கு மேல் பிறந்த குழந்தைகளுக்கு இனி measles, hepatitis B, meningitis C, rubella, mumps மற்றும் whooping cough உட்பட 11 தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்படும்.
  • ஆறு மாதக் குழந்தைகள் வரை இனி பெற்றோரின் படுக்கையறையிலேயே உறங்கச் செய்யுமாறு பரிந்துரைக்கப்படும். இதனால் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயங்கள் தவிர்க்கப்படலாம்.
  • பால் புகட்டுவதற்கு இனி பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதில் கண்ணாடி பாட்டில்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.
  • கடைசி அறிவுரை, குழந்தையைப் போட்டுக் குலுக்கக்கூடாது. இதனால் அவை வாழ்நாள் முழுவதும் குறைபாடுடையக் குழந்தைகளாக மாறும் அபாயத்திலிருந்து தப்பலாம்.
  • “நீங்கள் ஒரு வேளை எரிச்சலுற்றிருந்தால், குழந்தையை அழகாக படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்று உங்கள் அன்பிற்குரிய யாராவது ஒருவரையோ அல்லது ஒரு மருத்துவ உதவியாளரையோ அழையுங்கள்” என்று அந்த புத்தகம் கூறுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்