இந்தியாவுடனான 14 ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Kabilan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இந்தியா- பிரான்ஸ் இடையேயான 14 ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இம்மானுவேல் மேக்ரான், இன்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு, அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு, அணு எரிசக்தி, இருநாடுகளுக்கு இடையிலான ரகசிய தகவல் பரிமாற்ற தடுப்பு உள்பட 14 முக்கிய ஒப்பந்தங்களில், இந்திய பிரதமர் மோடியுடன் சேர்ந்து மேக்ரான் கையெழுத்திட்டார்.

மேலும், பிரான்ஸ் நிறுவனத்தில் இருந்து Spice Jet விமானங்கள், நீர்நிலைகளை நவீனப்படுத்துதல், இந்தியாவின் Sterlite மற்றும் பிரான்ஸ் நாட்டின் Air Liquid நிறுவனத்துக்கு இடையில் தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிவாயு உற்பத்தி முதலிய 16 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான ஒப்பந்தங்களும் இன்று கையொப்பமானது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் கூறுகையில், இந்தியாவில், 20 கோடி யூரோக்கள் அளவிலான தொழில் முதலீடுகளை செய்ய பிரான்ஸ் முன் வந்துள்ளது என தெரிவித்துள்ளது.

Reuters

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்