ஊடகம் குடியரசின் ஒரு முக்கிய பாகம்: பிரான்ஸ் நாட்டு மக்களில் பத்தில் எட்டுபேர் கருத்து

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் குடிமக்களில் பத்தில் எட்டு பேர் அல்லது 84 சதவிகிதம்பேர் ஊடகங்கள் என்பவை குடியரசுக்கு மிகவும் அவசியமானவை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

France Médias Monde என்னும் அமைப்பு மற்றும் இதர பிரான்ஸ் செய்தி நிறுவனங்கள் சார்பில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

எந்த சமூகப்பின்னணியைக் கொண்டவர்கள், எந்த வயதுடையவர்கள் என்ற பாகுபாடே இல்லாமல் சமுதாயத்தின் பலதரப்பட்டவர்களும் இந்தக் கருத்தை ஆமோதித்துள்ளனர்.

பிப்ரவரி மாதம் 12 முதல் 15 திகதிகளில், 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1800பேர் கலந்துகொண்ட இந்த ஆய்வில், பத்தில் ஒன்பது பிரான்ஸ் குடிமக்கள் பத்திரிகைத் துறையனது, குறிப்பாக பொய்யான செய்திகளைக் கண்டறிந்து அவற்றின் உண்மைத்தன்மையை சரி பார்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron கொண்டுவர உள்ள பொய்ச் செய்திகளை முடக்கும் முன்மொழிவு குறித்துக் கேட்டபோது, 70 சதவிகிதம்பேர் அது சரியானதுதான்என்றும் பொய்ச்செய்திகள் பரவுவதை தடுக்க அரசு தலையிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஒரு செய்தி உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதைத் தீர்மானிக்கும் அத்தியாவசிய ஆதாரங்கள் பொதுத்துறையினருக்கு கிடைக்காமல் இருக்கலாம் என்பதால் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் பொறுப்பு, மூத்த பத்திரிகையாளர்களுடையது என்று 67 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்