பிரான்ஸில் ஏழு சிறுமிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்: என்ன தண்டனை?

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்ஸில் ஏழு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த பாடசாலை ஆசிரியருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Sartrouville பகுதியில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த 39 வயதான நபர் கடந்த 2013-லிருந்து 2015 வரையிலான காலக்கட்டத்தில் 7 சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் துன்புறுத்தல்களை மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது நீதிமன்ற விசாரணை நடந்து வந்தது.

அவருக்கு paedophilia என்னும் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தொடுக்கும் மனநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் குறித்த ஆசிரியர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்