சிரியாவின் ரசாயனத் தாக்குதல்: பிரான்ஸ் தன் கடமையை செய்யும்

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

சிரியாவின் கிழக்கு கவுடா பகுதியில் உள்ள பொதுமக்கள் மீது குளோரின் எரிவாயு தாக்குதலுக்கு பிரான்ஸ் "அதன் கடமையைச் செய்யும்" என்று வெளியுறவு மந்திரி Jean-Yves Le Drian கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கடந்த ஞாயிறு அன்று சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நகரான டூமா மீது நடந்த இரசாயண தாக்குதலால் 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிரியா இதற்கு ஒரு பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

மீண்டுமொருமுறை இதுபோல ரசாயனத் தாக்குதல்கள் நடத்தினால் தாங்கள் சிவப்புக் கோடு (red line) எச்சரிக்கை காட்ட வேண்டியிருக்கும் என்று ஏற்கனவே பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பிப்ரவரி 18 அன்று சிரிய இராணுவம் விமானத் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கிழக்கு கௌடாவில் கொல்லப்பட்டனர்.

மேலும், டுமா நகரில் ஞாயிறன்று நடைபெற்ற ரசாயனத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் .

சிரியாவும் மாஸ்கோவும் ரசாயனத் தாக்குதல் செய்யவில்லை என்று மறுத்து வருகின்ற நிலையில் இதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க தனது நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கை கோர்த்திருக்கிறது பிரான்ஸ்.

மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை தெரிந்தே மீறியிருப்பதாக சிரியா மீது போர்க்குற்றம் சாட்டியிருக்கிறது பிரான்ஸ்.

கிழக்கு கௌடாவின் உண்மைத் தன்மை பற்றி விரைவில் ஐ நா சபை ஆராய இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்