பிரான்சில் அதிகாரியை தாக்கிய சிறுவர்களால் பரபரப்பு

Report Print Kavitha in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்சில் சிறைச்சாலை அதிகாரிகளை சிறுவர்கள் இருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொராக்கோ நாட்டைச் சேந்த ஒரு சிறுவர்கள், கடந்த புதன்கிழமை Lauvaur (Tarn) இல் உள்ள சிறுவர் நன்னடத்தை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

குறித்த இரண்டு சிறுவர்களும் தீவிர மதப்பற்றும் பயங்கரவாத சிந்தனையும் கொண்டவர்கள் எனவும், ஆக்ரோஷமான சுபாவம் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

எட்டு நாட்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அடுத்த நாள் காலை இருவரும் சிறைச்சாலை அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தின் போது அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இருவரையும் மடக்கி பிடித்த அதிகாரிகள், தனித்தனி சிறையில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்