பார்வையாளர்களுக்கு தடை... காலவரையின்றி இழுத்து மூடப்பட்ட ஈபில் டவர்

Report Print Athavan in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பாரிஸின் பிரபலமான சுற்றுலா மையமாக விளங்கும் ஈபிள் டவர் பாதுகாப்பு அதிகாரிகளின் வேலைநிறுத்தம் காரணமாக காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கோபுரத்தின் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள பைபோலஸ் என்ற தனியார் நிறுவனம் கோபுரத்தில் பணியாற்றும் ஊழியர்களில் மூன்று பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

பணியில் கவனக்குறைவாக இருந்ததால் இந்த நடவடிக்கை என நிர்வாகம் அறிவித்ததை ஏற்காத ஏனைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

ஈபிள் டவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதால் அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதை தெரிவித்த காரணத்தால் மூன்று ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் நாங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதாக தொழிலாளர் சங்க நிர்வாகி Denis Vavassori ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு 70 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து வரும் ஈபிள் கோபுரம் இப்போது பார்வையாளர்கள் இன்றி தனித்து நிற்கிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்