மேற்கு பிரான்ஸில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வன்முறை

Report Print Athavan in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்ஸ் நாட்டில் போராட்டத்தின் போது திடீர் என வன்முறை வெடித்ததால் பொலிசாரும், பொதுமக்களும் காயமடைந்தனர்.

மேற்குப் பிரான்ஸில் உள்ள நான்டஸ் என்ற இடத்தில் சில வருடங்களுக்கு முன்னர் கைவிடப்பட்ட விமானநிலையத்தில் வீடற்றவர்கள் சிலர் குடியேறி உள்ளனர்.

இந்நிலையில் அரசு நிலமாகிய அப்பகுதியை ஒட்டி புதிதாக விமான நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய விமானம் நிலையம் அமைவது இந்த பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று உள்ளூர் அரசியல்வாதிக்ள கூறிவந்தனர்.

எனவே புதிய விமான நிலையம் அமைக்கும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அங்கு பல வருடங்களாக ஆக்கரமித்து குடியிருப்பவர்களை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதற்கு அங்கு தங்கியிருப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் நான்டஸ் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் திடீர் என வன்முறையாக மாறீ பொலிசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் ஒருவருக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் போராட்டகாரர்களை கலைக்க பொலிஸார் தண்ணீரை பீய்ச்சியடித்து ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்களும் கற்களை பொலிஸார் மேல் எரிந்ததால் அந்த இடமே போரட்ட களம் போல் காட்சியளித்தது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்