பொலிசார் வாகனத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திய அகதிகள்: நடந்தது என்ன?

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸில் பொலிசாரின் வாகனத்தை சுற்றி வளைத்து அகதிகள் தாக்குதல் நடத்தியதில் இரண்டு பொலிசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கலேயில் உள்ள தொழில்துறை மண்டலம் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

இதனருகில் தான் அதிகளவிலான அகதிகள் முன்னர் தங்கியிருந்த ஜங்கிள் முகாம் இருந்தது.

CRS பொலிஸ் அதிகாரிகள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களின் வாகனத்தை அகதிகள் சுற்றி வளைத்தனர்.

பின்னர் கற்கள் மற்றும் கட்டைகளால் வாகனத்தை தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் 50 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்துள்ள நிலையில் இரண்டு பொலிசாருக்கு காயம் ஏற்பட்டது. இதோடு வாகனம் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் படையினர் கண்ணீர் புகையை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்