பிரான்சில் இந்த சூப்பர் மார்க்கெட்டில் இவர்களுக்கு தடை: வெளியில் எழுதப்பட்டிருந்த வாசகம்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்சில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இனவெறியர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சின் Franprix சூப்பர் மார்க்கெட்டின் வெளிப்பகுதியில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதில் இனவெறியாளர்கள் இங்கு தடை செய்யப்பட்டிருப்பதாகவும், இங்கு அரேபியர், கருப்பினத்தவர், ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என பலர் வேலை பார்ப்பதாக எழுதப்பட்டிருந்தது.

இது குறிந்து அந்த மார்க்கெட்டின் மேலாளர் கூறுகையில், பிரான்சில் இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் யாராவது அவமதிக்கப்படுவது மிகப் பெரிய குற்றமாகும்.

ஆனால் இங்கு தினந்தோறும் இனவெறியர்களின் அட்டூழியம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது தடுத்து நிறுத்தப்படவில்லை.

நான் யூதராக இருக்கிறேன், எனது பங்குதாரர் இத்தாலியனாக இருக்கிறார் வேலை செய்பவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இங்கு வாடிக்கையாளர்களாக வருபவர்கள் எங்களை அவமானப்படுத்துகிறார்கள். இது தினந்தோறும் தான் நடக்கிறது.

இது குறித்து பொலிசாரிடம் இரண்டு முறை கூறிய போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது என்னுடைய கடை, என்னுடைய இடம் அதனால் குழப்பம் அடைய விரும்பவில்லை. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் சில இனவெறியாளர்களாக உள்ளனர். அதன் காரணமாகவே இந்த முடிவு என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்