சிறுத்தையிடம் சிக்கிய பிரான்ஸ் குடும்பத்தினர்: வனவிலங்கு காப்பாகத்தில் நடந்த திக் திக் நிமிடம்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

நெதர்லாந்தில் உள்ள வனவிலங்கு பூங்காவில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பிரான்ஸ் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக சிறுத்தையிடமிருந்து தப்பியுள்ளனர்.

நெதர்லாந்தில் உள்ள African wildlife safari வனவிலங்கு பூங்காவிற்கு பிரான்சை சேர்ந்த குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுடன் சென்றுள்ளனர். பூங்காவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக பூங்காவின் உள்ளே செல்பவர்கள் விலங்குகளை காரின் உள்ளே இருந்து பார்க்க வேண்டுமே தவிர, வெளியில் பார்ந்து பார்க்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் நம்பர் பிளேட் கொண்ட கார் ஒன்று பூங்காவின் குறிப்பிட்ட பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

அப்போது காரின் உள்ளே இருந்த குடும்பத்தினர் வெளியில் வந்து கையில் தங்கள் குழந்தையுடன் வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர்.

அந்த நேரத்தில் எதிர்பாரதவிதமாக பூங்காவில் இருந்த இரண்டு சிறுத்தைகள் அவர்களை நோக்கி வேகமாக விரட்டிச் சென்றது. இதைக் கண்ட அவர்கள் உயிருக்கு பயந்து காரை நோக்கி வேகமாக ஓடினர்.

இருப்பினும் சிறுத்தை தொடர்ந்து விரட்டியதால், அப்போது குழந்தை வைத்திருந்த பெண் மிரட்டிய பின்பு அந்த சிறுத்தை நின்றுள்ளது. அதன் பின் அவர்கள் உடனடியாக காரில் ஏறிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான காட்சி பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவரின் காரில் பதிவாகியிருந்ததால், தற்போது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்