பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபல தமிழ் நடிகரின் படம்: விவேக் நெகிழ்ச்சி

Report Print Santhan in பிரான்ஸ்
385Shares
385Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகரான தனுஷ் முதன் முறையாக தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

பிரான்ஸ் மொழியில் உருவாகியுள்ள இப்படத்தை கென் ஸ்காட் இயக்கியுள்ளார், படம் முற்றிலும் முடிவடைந்த நிலையில், இந்த மாதம் திரையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸில் நடக்கும் உலகப்புகழ்ப்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தாண்டு, தனுஷின் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர் படமும் திரையிடப்பட இருக்கிறது.

இதற்காக தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளனர். கேன்ஸ் பட விழாவில் தனுஷ் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

பிரான்ஸ் சென்றுள்ள தனுஷ், அங்கு படக்குழுவுடன் எடுத்து கொண்ட போட்டோவை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கேன்ஸ் பட விழாவில் தமிழ் நடிகரின் படம் ஒன்று திரையிடப்படுவதால், நடிகர் விவேக் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதுடன், இது பெருமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்