பாரிஸ் நகரை உலுக்கிய வாள்வெட்டு சம்பவம்: இருவர் பலி, பலர் படுகாயம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
1350Shares
1350Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மர்ம நபர் பொதுமக்களிடையே புகுந்து நடத்திய கொடூர வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை சுற்றி வளைத்த பொலிசார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

சம்பவத்தின்போது பொதுமக்கள் பயத்தில் அலறியவாறே நான்கு பக்கமும் சிதறி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரிசின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஓபரா மாவட்டத்திலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பலரும் உயிர் தப்பும் பொருட்டு தெரு வீதியில் இருந்து அருகாமையில் உள்ள உணவு விடுதிக்குள் அவசர அவசரமாக புகுந்துள்ளனர்.

தாக்குதலின் நோக்கம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்து சடலம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் 8 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அவசர ஊர்திகள் மற்றும் மருத்துவக் குழுக்களின் வாகனங்கள் சம்பவப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பொலிசாரின் துரித்த நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் உள்விவகாரத் துறை அமைச்சர் Gerard Collomb பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்