தன்னைத் தானே கூண்டில் அடைத்துக் கொண்ட மல்லிகா ஷெராவத்: கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு

Report Print Santhan in பிரான்ஸ்
339Shares
339Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகையான மல்லிகா ஷெராவத் திடீரென்று கேன்ஸ் திரைப்பட விழாவின் போது கூண்டில் அடைத்துக்க் கொண்டதால், அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.

பிரான்சில் கடந்த 8-ஆம் திகதி துவங்கிய கேன்ஸ் திரைப்பட விழா, வரும் 19-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

71-வது ஆண்டாக நடைபெற்றுவரும் இந்த விழாவில், பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, சோனம் கபூர் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பில் மிடுக்காக நடந்து வந்தனர்.

இதில் பாலிவுட் மட்டுமின்றி ஆங்கிலம் மற்றும் சீனப் படங்களிலும் நடித்துவரும் மல்லிகா ஷெராவத்தும் ரெட் கார்ப்பெட்டில் நடை பயின்றார்.

இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும் இடத்தில், திடீரென்று மல்லிகா தன்னைத் தானே ஒரு இரும்புக் கூண்டுக்குள் அடைத்துக் கொண்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.

அதன் பின் இது குறித்து அவர் கூறுகையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் நான் கலந்து கொள்வது இது 9-வது வருடம்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடைபெறும் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இது மிகச்சிறந்த இடம் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு நிமிடமும் எங்காவது ஒரு பெண் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார். இதில், இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை. எனவே, என்னால் முடிந்த அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இதுவே சிறந்த இடம் என்பதால் அப்படி செயல் செய்ததாக கூறியுள்ளார்.

திடீரென்று அவர் செய்த செயலால் அங்கு பரபரப்பு நிலவினாலும், அதன் பின் அவரின் நல்ல உள்ளத்தைத் தெரிந்துகொண்டு அங்குள்ளவர்கள் வாழ்த்தியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்