என் கணவர் எனக்காக செய்ததை யாரும் பேசவில்லையே? பிரபல நடிகை சோனம் கபூர் ஆவேசம்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகையான சோனம் கபூர் தான் காதலித்து வந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சோனம் கபூர் தன்னுடைய டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனம் என்ற பெயருடன் அஹுஜா என்ற பெயரை இணைத்துக் கொண்டார்.

அவரின் இந்த பெயர் மாற்றம் பல்வேறு விவாதங்களை எற்படுத்தி இருந்தது.

ஏனெனில் திருமணத்திற்கு பிறகு பெண்கள் தன் கணவனின் குடும்பப் பெயரை எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது தன் தந்தையின் குடும்பப் பெயரிலேயே நீடிக்க வேண்டுமா என்ற விவாதம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

சோனம்கபூரின் இந்த பெயர் மாற்றத்திற்கு பிரபல நடிகைகள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்திருந்தனர்.

இதையடுத்து தற்போது சோனம் கபூர் பிரான்சில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு இதற்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில் கூறியுள்ளார்.

இந்த பெயர் மாற்றம் குறித்து கூறுகையில், நான் பெண்ணியம் பேசும் பெண் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம், திருமணத்திற்கு பிறகு நான் யாருடைய பெயரை என் பின்னாடி சேர்க்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

ஏன் என் கணவர் ஆன்ந்த் கூட தான் எங்கள் குடும்ப பெயரை அவரின் பெயருக்கு பின்னால் இணைத்துக் கொண்டுள்ளார். ஆனால், அதைப்பற்றி யாருமே பேசவில்லை ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நான் என்ன செய்கிறேன் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். யாருடைய ஆலோசனையும் தேவை இல்லை.

32 வயதாகும் எனக்கு யாருடைய பெயரை சேர்த்து கொள்ள வேண்டும், கூடாது என்பது தெரியும். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தந்தை மற்றும் குடும்பம் எப்படியோ, அதே போன்று தான் திருமணத்திற்கு பிறகு அவரின் குடும்பம் முக்கியம் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்