பிரான்சில் இன்று முதல் அதிகரிக்கும் எரிவாயுவின் விலை: எத்தனை சதவீதம் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்
167Shares
167Shares
lankasrimarket.com

பிரான்சில் கடந்த மே மாதத்திற்கு பின்பு எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜுன் மாதம் 1-ஆம் திகதி மீண்டும் விலை அதிகரிக்கப்படுகிறது.

அதன் படி சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயுவின் விலை 0.7 சதவீதமும், சமையல் மற்றும் வெந்நீருக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவிற்கு 1.3 சதவீதமும், இதை தவிர வெப்பத்திற்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவிற்கு 2.2 சதவீதமும் விலை ஏற்றப்படவுள்ளது.

மேலும் கடந்த மே மாதம் 0.4 சதவீதம் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்