பல கார்களை திருடி விற்ற கொள்ளையர்கள்: எவ்வளவு பணம் பெற்றார்கள் தெரியுமா?

Report Print Raju Raju in பிரான்ஸ்
275Shares
275Shares
lankasrimarket.com

பிரான்ஸில் 18 வயது முதல் 40 வயதுகளை கொண்ட கொள்ளைக்கார கும்பல் ஒன்று விலை மதிப்புள்ள கார்களை திருடி வந்த நிலையில் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

Val-d'oise மற்றும் Yvelines ஆகிய இரண்டு பகுதிகளில் இருந்து இவர்கள் 51 கார்களை இதுவரை திருடியுள்ளனர்.

திருடிய கார்களை துண்டு துண்டாக பிரித்துவிட்டு அனைத்தையும் கழுவி துடைத்து புதிது போல ஆக்கிவிட்டு இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்துள்ளார்கள்.

இதுவரை 80,000 யூரோக்களுக்கு மொத்தமாக உதிரிப்பாகங்களை இந்த கொள்ளக்கார குழு விற்பனை செய்துள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கொண்ட குழுவினை மூன்று தினங்களுக்கு முன்னர் பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்தார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்