பிரான்ஸ் பெண்மணிக்கு ஆயுள்தண்டனை விதித்த ஈராக் நீதிமன்றம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த பிரான்ஸ் பெண்ணுக்கு ஈராக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி Melina Boughedir(27). இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஈராக் சென்ற அவர் ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார்.

இதனிடையே ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் மெலினா கைது செய்யப்பட்டார்.

அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்துள்ளது.

சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்ததாக கூறி அவருக்கு இத்தண்டணை வழங்கப்பட்டது. தண்டணை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேறி பிரான்சுக்கு செல்லவும் உத்தரவிட்டுள்ளது.

குறித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஈராக் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த மெலினாவுக்கு ஆயுள் தண்டணை விதித்தது.

இந்த தண்டணையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு கடந்த ஏப்ரலில் Djamila Boutoutaou என்ற பிரான்ஸ் நாட்டவர் ஆயுள்தண்டனை பெற்றார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்