பிரான்ஸ் பள்ளிகளில் இனி மொபைல் பயன்படுத்த கூடாது: நாடாளுமன்றம் முடிவு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

செப்டம்பர் மாதத்திற்குப்பின் பிரான்ஸ் நாட்டில் பள்ளிகளில் மொபைல் போன்களை பயன்படுத்த முடியாது.

பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழவையில் இந்த மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

ஏற்கனவே பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தனது தேர்தல் பிரச்சாரத்தில் நர்சரி, ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மொபைல் போன் பயன்பாட்டை தடை செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

புதிய சட்டம், பள்ளி விளையாட்டு மைதானங்கள் உட்பட பள்ளி வளாகத்தில் எங்கும் இடைவேளைகளில் கூட மாணவர்கள் மொபைல் பயன்படுத்துவதை தடை செய்கிறது.

2010 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் ஒன்று மாணவர்கள் வகுப்பில் மொபைல் போன் உபயோகிக்கக் கூடாது என்று கூறுகிறது.

மேக்ரானின் கட்சியைச் சேர்ந்த சிலரோ ஒரு படி மேலே போய், பெரியவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும், எனவே ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்ததும் மொபைல்களை சரண்டர் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

ஆனால் மேக்ரானின் சட்ட சபையிலுள்ள கல்வி அமைச்சரான Jean-Michel Blanquer, ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார்.

பள்ளிகளில் மொபைல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையே சமுதாயத்திலுள்ள பெரியவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் குழந்தைகள் மொபைல் பயன்படுத்தும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார்கள்

என்பதைக் குறித்து காரசாரமாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மொபைல் போன்களை நோண்டிக் கொண்டிருந்த சம்பவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்