புகழ்பெற்ற மெக்கா மசூதியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபர்: வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

சவுதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற மசூதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் பல்லாயிரம் பேருக்கு மத்தியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய மக்களின் புனித ஸ்தலமாக இருப்பது மெக்கா மசூதி.

சவுதி அரேபியா நாட்டில் இறை தூதர் முகமது நபியின் சொந்த ஊரான மெக்கா நகரில் இந்த மசூதி அமைந்துள்ளது.

இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மெக்காவுக்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்பது 5 முக்கிய கடமைகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது.

இதனால் மெக்காவுக்கு உலகம் முழுவதும் இருந்து இஸ்லாமியர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.

இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் மெக்காவுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் மெக்காவில் உள்ள மசூதியில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில், அப்போது மசூதியின் மூன்றாவது தளத்தில் இருந்த ஒரு நபர் திடீரென்று கீழே குதித்தார்.

கிழே குதித்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இறந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் எனவும், என்ன காரணத்திற்காக இது போன்ற முடிவு எடுத்தார் என்பது தெரியவில்லை எனவும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்