பிரான்சில் பிடித்து வைத்திருந்தவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி மிரட்டல்! கடைசி நிமிடத்தில் அதிர்ச்சி

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்சில் பிணைகைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்கள் மீது அந்த நபர் பெட்ரோலை உற்றி மிரட்டியுள்ள சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Rue des Petites Ecuries-ல் உள்ள Mixicom computer ஸ்டோர் உள்ளே உள்ளூர் நேரப்படி 5 மணிக்கு புகுந்த மர்ம நபர் அங்கிருக்கும் 3 பேரை பிடித்து வைத்து மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியன.

அதன் பின் அந்த மூன்று பேரில் ஒருவர் அந்த நபரிடம் சண்டை போட்டு தப்பி வந்துவிட்டதாகவும், தப்பிய நபருக்கு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மீதம் இருந்த இரண்டு பேரில் ஒருவர் கர்ப்பிணி பெண், அதுமட்டுமின்றி இந்த இரண்டு பேரையும் பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த நபர் கையில் துப்பாக்கி மற்றும் பையில் வெடிக்கக் கூடிய குண்டு வைத்திருந்ததால், அந்த பகுதியை சுற்றி வளைத்த பொலிசார் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தனர்.

அப்போது அவன், பொலிசாரிடம் தன்னுடைய கோரிக்கையாக இரான் தூதரக அதிகாரியிடம் பேச வேண்டும் என்று தெரிவித்திருந்தான்.

இதையடுத்து தொடர்ந்து நான்கு மணி நேரம் அவனை பிடிப்பதற்கு போராடிய பொலிசார், சரியாக இரவு உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் அவனை கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருந்த நபர் ஒரு மனநிலை சரியில்லாதவர் போல் தெரிகிறார்.

அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கி போலி துப்பாக்கி எனவும், ஆனால் பெட்ரோல் வைத்திருந்ததால், பிணைக்கைதிகள் இரண்டு பேரின் மீதும் ஊற்றி கடைசி நிமிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தினான்.

அதன் பின் சாதுர்யமாக செயல்பட்டு அவனை பிடித்துவிட்டோம். இதற்கும், தீவிரவாத இயக்கத்திற்கும் சம்பந்தமில்லை எனவும், தொடர் விசாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும் என்று கூறியுள்ளார்.

பிரான்சில் சமீபகாலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தான் இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்