16.2 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனையான குவளை: அப்படியென்ன சிறப்பு?

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸில் குவளை ஒன்று 16.2 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த குவளை ஒன்று ஏலத்தில் விடப்பட்ட நிலையில் சீன பேரரசர் Quianlong-க்காக குறித்த குவளை தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

பாரீஸில் வெளிநாட்டு பொருட்களை எல்லாம் ஏலத்தில் விடும் நிறுவனம் இந்த குவளையை ஏலத்தில் விட்டுள்ளது.

இந்நிறுவனம் மூலம் ஏலத்தில் விடப்பட்ட முதல் சீன நாட்டு பொருள் இதுவாகும், இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க இந்த குவளை தற்போது 16.2 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது.

குவளையை விற்பனைக்கு கொண்டு வந்த நபர் கூறுகையில், இது ஒரு சப்பாத்து பெட்டியில் பல சகாப்தங்களாக இருந்தது.

என்னுடைய தாத்தா இதை வைத்திருந்தார், அவருக்கு பளிச்சிடும் வண்ணங்கள் பிடிக்காததால் இதை மூடியே வைத்திருந்தார் என கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்