பிரான்சில் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் மோசமாக நடந்து கொண்ட மருத்துவருக்கு கிடைத்த தண்டனை?

Report Print Santhan in பிரான்ஸ்
143Shares
143Shares
lankasrimarket.com

பிரான்சில் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரான்சின் Argent-sur-Sauldre மாகாணத்தின் 2000 கிராம மக்கள் வசித்து வரும் Sologne பகுதியில் Thierry Dassas என்ற 68 வயது நபர் மருத்துவராக பணி புரிந்து வந்துள்ளார்.

அப்போது இவரிடம் சிகிச்சைக்காக பெண்கள் வரும் போது, சிகிச்சை என்ற பெயரில் பெண்களின் உடல்களில் கண்ட இடங்களில் தொடுவது போன்ற பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து இது தொடர்பாக புகார் வந்ததன் அடிப்படையில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அதன் பின் இது தொடர்பான வழக்கு நடந்து வந்த வேளையில், கடந்த வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அப்போது இவருக்கு 18 ஆண்டுகள் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இவர் தன்னுடைய பணிக்காலங்களில் 32 பெண்களிடம் அத்து மீறி நடந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்