பிரான்ஸின் பிரபல கொள்ளை கும்பல் தலைவன் சிறை உடைத்து தப்பியோட்டம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
272Shares
272Shares
lankasrimarket.com

பிரான்ஸில் தேடப்படும் குற்றவாளியான 46 வயது Redoine Faid பாரிஸ் நகரில் அடைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் வந்த மூவர் படை Redoine Faid-ஐ சிறையை உடைத்து ஹெலிகொப்டரில் தப்பிக்க வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Redoine Faid சிறையை உடைத்து தப்புவது இது முதன் முறை அல்ல. கடந்த 2013 ஆம் ஆண்டு பிரான்ஸின் வடபகுதியில் அமைந்துள்ள சிறை ஒன்றில் இருந்து வெடிகுண்டு வைத்து சிறையை தகர்த்து தப்பியுள்ளான்.

ஆனால் 6 வாரங்களுக்கு பின்னர் பொலிசார் கைது செய்து மீண்டும் சிறையில் தப்பியுள்ளான்.

தற்போது Redoine Faid சிறையில் இருந்து தப்பியுள்ளது திட்டமிட்ட சதி எனவும், உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணியளவில் சிறையின் விருந்தினர் பகுதியில் Redoine Faid காத்திருந்துள்ளார்.

ஆயுததாரிகளான மூவர் சிறை அதிகாரிகளிடம் வந்து Redoine Faid-ஐ விடுவிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இருவர் ஆயுதங்களை காட்டி அதிகாரிகளை மிரட்டவும் ஒருவர் Redoine Faid-ஐ அழைத்துக் கொண்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகொப்டர் நோக்கி விரைந்துள்ளார்.

அங்கிருந்து அவர்கள் புறப்படு சென்றதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள Redoine Faid தற்போது 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

2017 ஆம் ஆண்டு மேலும் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்