பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை கும்பல் தலைவன்: சிறையை உடைத்து ஹெலிகாப்டரில் தப்பி ஓடும் காட்சி

Report Print Santhan in பிரான்ஸ்
2267Shares
2267Shares
lankasrimarket.com

பிரான்சில் சிறையை உடைத்து தப்பி ஓடிய கொள்ளை கும்பல் தலைவன் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Reau சிறைச்சாலையில் பல வழக்குகளில் தொடர்புடைய கொள்ளை கும்பல் தலைவன் Redoine Faid(46) சிறையை உடைத்து ஹெலிகாப்டரில் தப்பி ஓடினான்.

பொலிஸ் அதிகாரிகள் பலர் இருக்கும் வேளையில் ஹெலிகாப்டரில் வந்த இரண்டு நபர்கள் அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி Redoine Faid-ஐ ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.


சுமார் 37 கி.மீற்றர் தூரம் சென்றவுடன் அங்கிருக்கும் ஒரு கருப்பு நிற Renault காரை பயன்படுத்தி தப்பியுள்ளனர்.

கடந்த 2010-ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலை வழக்கில் குற்றவாளியான Redoine Faid-க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது போன்று அவன் மீது பல வழக்குகள் உள்ளது.

Redoine Faid ஜெயிலில் இருந்து தப்பிப்பது இது முதல் முறையல்ல எனவும் கடந்த 2013-ஆம் ஆண்டும் சிறையிலிருந்து தப்பித்ததாகவும், அதன் பின் 6 மாதங்களுக்கு பின் பொலிசார் அவரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவன் தற்போதும் தப்பித்து உள்ளதால், பொலிசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Redoine Faid சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சி தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை சிறைச்சாலையில் இருக்கும் மற்றொரு குற்றவாளி எடுத்ததாக கூறப்படுகிறது. சிறைச்சாலையில் குற்றவாளி இந்த வீடியோவை எப்படி எடுத்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்