ஹெலிகொப்டரில் தப்பிய சிறைக்கைதி: அதிர்ச்சி பின்னணி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
770Shares
770Shares
lankasrimarket.com

சில மாதங்களுக்குமுன் பிரான்ஸ் சிறை ஒன்றிற்கு மேல் ட்ரோன்கள் வட்டமிட்டதற்கும் தற்போது பயங்கர குற்றவாளி ஒருவன் தப்பியதற்கும் தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பாரீசுக்கு தெற்கே அமைந்துள்ள Reau சிறைச்சாலைக்குமேல் பல ட்ரோன்கள் வட்டமிட்டதாக பிரான்சின் நீதித்துறை அமைச்சர் Nicole Belloubet தெரிவித்தார்.

ட்ரோன்கள் வட்டமிட்டதற்கும் ஞாயிறன்று பயங்கர குற்றவாளியான Redoine Faid தப்பியதற்கும் தொடர்பு இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கர ஆயுதங்களுடன் ஹெலிகொப்டரில் வந்திறங்கிய சிலர் Faid தனது சகோதரருடன் பேசிக்கொண்டிருந்த அறைக் கதவை உடைத்து அவனை தப்பிக்க செய்தனர்.

பிரான்ஸ் பிரதமர் Edouard Philippe கூறும்போது, 2,900 பொலிசார் Faidஐத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவன் பயங்கரக் குற்றவாளி என்பது நன்றாகத் தெரியும், அதனால் எவ்வளவு சீக்கிரம் அவனை பிடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் அவனை பிடிக்க வேண்டும் என்றார் அவர்.

Faid கொள்ளை முயற்சி ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தான். ஏற்கனவே அவன் 2013ஆம் ஆண்டு ஒரு முறை சிறையிலிருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்