சொந்தமாக புற்றுநோய்க்கு மருந்து தயாரித்து விற்பனை: பொலிசில் சிக்கிய பிரித்தானிய தாயார்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
150Shares
150Shares
lankasrimarket.com

பிரான்ஸில் புற்றுநோய்க்கான மருந்து தயாரித்து விற்பனை செய்த பிரித்தானிய பெண்மணி மீது பொலிசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பிரான்ஸின் Nor­mandy பகுதியில் குடியிருக்கும் 54 வயது Lesley Hutchings என்பவரே புற்றுநோய்க்கான மருந்து தயாரித்து இணையத்தில் விற்பனை செய்து வந்தவர்.

சட்டவிரோதமாக மருந்து தயாரித்ததாக கூறி பிரெஞ்சு பொலிசார் குறித்த பெண்மணி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மட்டுமின்றி அவரது பாஸ்போர்ட்டை பறித்துச் சென்றதுடன் வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளனர்.

லெஸ்லி தயாரித்த புற்றுநோய்க்கான மருந்தை அவர் பேஸ்புக் பக்கத்தின் வாயிலாக 40 பவுண்ட்ஸ் கட்டணத்தில் விற்பனை செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று லெஸ்லியின் குடியிருப்புக்குள் புகுந்த பொலிசார், கணிணி மற்றும் சில குறிப்புகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

முன்னாள் கணக்காளரான லெஸ்லி மருத்துவம் தொடர்பான படிப்பு எதையும் முடித்திருக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் அவர் தயாரித்து விற்பனை செய்துவரும் மருந்தால் வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்துள்ளதாகவும், இதுவரை எந்த எதிர்ப்பும் எழுந்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கிய பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் முன்னர் பணிபுரிந்த நிலையில் பிரெஞ்சு பொலிசார் தற்போது தம்மை அந்த வழக்கில் சிக்கவைக்க முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமது மருந்தானது புற்றுநோயை அடியோடு போக்கும் என தாம் உறுதியளித்தது இல்லை எனவும்,

ஆரோக்கியம் மேம்படும் என எவரிடமும் விளம்பரப்படுத்தியது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் தயாரித்த மருந்தானது புற்றுநோயை எதிர்த்து போராடும் என மட்டுமே தமது வாடிக்கையாளர்களிடம் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லெஸ்லி கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்தே பிரான்ஸில் குடியிருந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தனியாக புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்க துவங்கியுள்ளார்.

மட்டுமின்றி தமது பேஸ்புக் பக்கத்தில் மட்டுமே விளம்பரமும் செய்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட லெஸ்லி அது முதல் பிணையில் இருந்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்