பிரான்சில் மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை: நடந்தது என்ன?

Report Print Santhan in பிரான்ஸ்
249Shares
249Shares
lankasrimarket.com

பிரான்சில் குடும்ப தகராறு காரணமாக மகனை தந்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Saint-Gilles பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி இரவு 09.30 மனிக்கு 30 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய காதலி மற்றும் தந்தையுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது எழுந்த தகராறின் காரணமாக மகன் தந்தையின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை மேஜை அருகே இருந்த கத்தி ஒன்றினால் மகனை குத்தியுள்ளார்.

இதனால் தொண்டைப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக மகன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தந்தையை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்