உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியில் பிரான்சுக்கு ஆதரவளியுங்கள்: கேட்ட பிரபலம் யார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
411Shares
411Shares
lankasrimarket.com

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியில் பிரான்சுக்கு ஆதரவளியுங்கள் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கேட்டுக் கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lagos பயணத்தின்போது இளம் நைஜீரிய கால்பந்து வீரர்களிடையே உரையாற்றியபோது அவர் கூறிய வாசகத்தை மேக்ரான் ட்வீட்டாக வெளியிட்டுள்ளார்.

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியிலிருந்து Super Eagles என்று அழைக்கப்படும் நைஜீரிய அணி வெளியேறி விட்டதால் இனி பிரான்சு அணிக்கு ஆதரவளியுங்கள் என அவர் நைஜீரியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு ஆப்பிரிக்க அணியில் விளையாடும் அளவிற்கு பிரான்ஸ் அணியில் 14 ஆப்பிரிக்க வீரர்கள் உள்ளதாக பிரபல ஊடகவியலாளர் ஒருவர் வேடிக்கையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இரண்டு பிரான்ஸ் வீரர்களின் சகோதரர்கள் ஆப்பிரிக்க அணியில் உள்ளனர், Paul Pogbaவின் சகோதரர் Florentin, Guineaவுக்காக விளையாடுகிறார், Steve Mandandaவின் சகோதரர் Parfait, Democratic Republic of Congoவுக்காக விளையாடுகிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்