115 அடி உயரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கயிற்றில் நடந்த இளம்பெண்: திக் திக் வீடியோ

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
310Shares
310Shares
lankasrimarket.com

பாரீஸின் Montmartre மலைப்பகுதியில் Sacre Coeur basilica ஆலயத்துக்கும் கிரேன் ஒன்றிற்கும் நடுவில் கட்டப்பட்டிருந்த ஒரு கயிற்றின் மேல் ஒரு இளம்பெண் நடந்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Tatiana-Mosio Bongonga (34) என்னும் அந்த அழகிய இளம்பெண் சர்வசாதாரணமாக அவ்வளவு உயரத்தில் கயிற்றில் நடக்கிறார்.

நடனாமாடுவது போல் ஒரு கட்டத்தில் அசைவுகளைக் கொடுக்கும் Bongonga, இந்த அனுபவம் தனக்கு த்ரில்லாக இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

கயிற்றில் நடப்பது பல இடங்களில் செய்யப்படும் ஒரு சாகசம்தான் என்றாலும் பொதுவாக கயிற்றில் நடப்பவர்கள் கீழே விழாமல் தவிர்ப்பதற்காக ஒரு கொக்கியுடன் இணைக்கப்பட்ட ஒரு கம்பியை தங்கள் உடலுடன் இணைத்திருப்பார்கள்.

ஆனால் Bongonga எந்த பாதுகாப்பு உபகரணங்களுமின்றி தன்னை எந்த கயிற்றுடனும் இணைத்துக் கொள்ளாமல் இந்த சாகசத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்