பிரான்சில் திடீரென விமானம் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு: தீவிரவாத அச்சுறுத்தலா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
283Shares
283Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சீன விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரீஸிலிருந்து பீஜிங் புறப்பட்ட விமானம் ஒன்று 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

இதைத் தொடர்ந்து விமானத்திலிருந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக விமானம் திருப்பப்பட்டதாக மட்டும் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு வெடிகுண்டு மிரட்டல் இருந்தது பின்னர் தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நபர் தெரிவித்த ஒரு தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

யாருமற்று கிடந்த ஒரு பார்சல் காரணமாக விமான நிலையத்தில் தாமதம் ஏற்பட்டதால், அவர் சீன விமான அலுவலகத்துக்கு போன் செய்து விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தெரிவிக்க, அதைக் கேட்ட நபரோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக

தவறாகப் புரிந்து கொள்ள, இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது, அந்த நபரைக் கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்