இந்தியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! இனி பிரான்ஸ் பயணவழி விசா தேவையில்லை

Report Print Kavitha in பிரான்ஸ்
716Shares
716Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாடு வழியாக கடந்து வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு இனி விமான நிலைய பயணவழி விசா வைத்திருக்கத் தேவையில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாடு வழியாக இதர வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், அந்நாட்டு விமான நிலையத்தில் இறங்கி வேறு இணைப்பு விமானங்களில் செல்வதற்கு பயணவழி விசா பெற வேண்டியது கட்டாயமாக இருந்தது.

இந்நிலையில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்ட்ரே ஜிக்லர் “ இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் ஜூலை 23, 2018 முதல், பிரான்ஸில் உள்ள சர்வதேசவ விமான நிலையங்களைக் கடந்து வெளிநாடு செல்லும் இந்தியர்கள் விமான நிலைய பயணவழி விசா (ஏடிவி) வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்