அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இது ஆதரவாக இல்லை: இம்மானுவேல் மெக்ரான்

Report Print Kabilan in பிரான்ஸ்
215Shares
215Shares
lankasrimarket.com

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான பரந்த வர்த்தக உடன்படிக்கை புதிதாக இருந்தாலும், அது ஐரோப்பாவிற்கு ஆதரவாக இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான பரந்த வர்த்தக உடன்படிக்கைக்கான கூட்டம், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜியன்-கிளவ்டி ஜன்கர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போன்ற முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த புதன்கிழமை, டிரம்ப் மற்றும் ஜன்கர் இருவரும் வர்த்தக போரை தணிக்கும் வகையில் திட்டம் ஒன்றை அறிவித்தனர். அதன் விளைவாக ஐரோப்பாவிற்கு எதிராக இப்போதும் இருப்பது போல் வாஷிங்டனில் வாகன கட்டணங்களின் அச்சுறுத்தலை திரும்பப் பெறும் வகையில் அமைந்தது.

எனினும், அந்த உடன்படிக்கையின் விவரங்கள் தெளிவற்றதாக இருந்தன. மேலும், அட்லாண்டிக் நட்பு நாடுகளின் உறவுகளில் ஒரு புதிய கட்டத்தை இது தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உடன்படிக்கை குறித்து பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டிரம்ப் மற்றும் ஜன்கர் ஆகியோரின் இந்த ஒப்பந்தம் பயனுள்ளதாக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்காவுக்கு இடையேயான உறவுக்கு ஆதரவாக இல்லை என தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டின் பிரதமர் Pedro Sanchez உடனான சந்திப்பிற்கு பிறகு மெக்ரான் கூறுகையில்,

‘ஐரோப்பா மற்றும் பிரான்ஸ் எந்த ஒரு வர்த்தக போரையும் விரும்பவில்லை. நேற்றைய பேச்சுவார்த்தை பயனுள்ளதாகவும், எந்த ஒரு தேவையற்ற பதற்றத்தையும் மீண்டும் அளவிடும் வகையிலும் அமைந்தது. மேலும், அது திருப்திபடுத்தும் வகையிலும் இருந்தது.

ஆனால், ஒரு நல்ல வர்த்தக விவாதம் என்பது எந்தவொரு அச்சுறுத்தலிலும், ஒரு சமநிலையான, பரஸ்பர அடிப்படையில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

இது சம்பந்தமாக நாங்கள் பல கேள்விகளையும் தெளிவுபடுத்துவோம். TTIP வழியே ஒரு பரந்த வர்த்தக உடன்பாட்டை தொடங்குவது எங்களுக்கு ஆதரவாக இல்லை. ஏனெனில், தற்போதைய சூழல் அதனை அனுமதிக்கின்றது.

உதாரணமாக சுற்றுச்சூழல், சுகாதாரம் அல்லது உணவு போன்றவற்றில் எந்த ஒரு ஐரோப்பிய தரமும் ஒடுக்கப்படாது அல்லது குறைக்கப்படாது என்று நான் நம்புகிறேன்.

அமெரிக்காவிடம் இருந்து எஃகு மற்றும் அலுமினியம் மீதான சட்ட விரோத வரிவிதிப்புகள் குறித்த தெளிவான சைகைகள் தேவை. ஏனெனில், அது எனக்கு கான்கிரீட் நெடுஞ்சாலை அமைக்க ஒரு முன்னோடியாக அமையும்’ என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்