பிரான்சில் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த இளைஞன்: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
312Shares
312Shares
lankasrimarket.com

பிரான்சில் ரயில் பயணத்தின்போது தம்மை தாக்க வந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து இளைஞன் ஒருவன் வெளியே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் Choisy-le-Roi மற்றும் Austerlitz பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் ரயில் ஒன்றில் இந்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி நடந்துள்ளது.

சம்பவத்தின்போது 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 5 இளைஞர்கள் குறித்த இளைஞரை குறிவைத்து தாக்க முயன்றுள்ளனர்.

அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் பொருட்டு குறித்த 18 வயது இளைஞன் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்துள்ளதாக கூறப்படுகிறது.

80 கி.மீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் இருந்து வெளியே குதித்ததால் படுகாயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான கட்டத்தை கடந்துள்ளபோதும் இன்னமும் மருத்துவமனையில் குறித்த இளைஞர் இருந்துவருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே குறித்த இளைஞரை தாக்க முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை கடந்த 25 ஆம் திகதி பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்