பிரான்சில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கிய தீயணைப்புப்படை அதிகாரிகள்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
146Shares
146Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தலைநகர் பாரிசை சேர்ந்த தீயணைப்புப்படை அதிகாரிகள் மீது மூன்று பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

முதல் குற்றச்சாட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது. உயர் அதிகாரி ஒருவர் சக பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய இரண்டு குற்றச்சாட்டுக்களும் 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பதிவாகியுள்ளன. Créteil நகர அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது.

Boulogne-Billancourt சேர்ந்த தீயணைப்பு படையினர் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இத்தகவலை தனியார் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

மட்டுமின்றி, இந்த குற்றம் மறைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

முன்னதாக 2008 ஆம் ஆண்டில், தீயணைப்பு படையினர் ஏழு பேர் இதே போன்ற ஒரு வழக்கில் கைது செய்யப்படிருந்தனர்.

அப்போது 15 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரெஞ்சு தீயணைப்புத்துறையில் 16 விழுக்காடு பெண்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்