குழந்தைக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல்: விமானத்தில் கதறி அழுத தாயின் வீடியோ

Report Print Vijay Amburore in பிரான்ஸ்
374Shares
374Shares
lankasrimarket.com

பாரிஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் திடீரென 1 மாத குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கதவை திறக்குமாறு விமான ஊழியர்களிடம் குழந்தையின் தாய் கெஞ்சும் காணொளி இணையத்தில் பரவி வருகின்றது.

கடந்த ஆகஸ்ட் 7-ம் திகதியன்று பாரிஸிலிருந்து லாகூர் நோக்கி செல்லவிருந்த பாகிஸ்தான் இன்டர்நெஷனல் விமானம் 3 மணி நேரம் தாமதாக புறப்பட்டுள்ளது. விமானத்தின் உட்பகுதியில் AC கூட போடப்படாமல் இருந்ததால் பயணிகள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அப்பொழுது 1 மாத கைக்குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன குழந்தையின் தாய், சிறுது நேரம் கதவை திறந்தால் குழந்தைக்கு சுத்தமான காற்று கிடைக்கும் என விமான ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் மேலதிகாரிகள் தங்களுக்கு எந்த அனுமதியும் தரவில்லை என கூறி கதவை திறக்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த குழந்தையின் தாய் கதவை திறக்குமாறு கெஞ்சியுள்ளார். இதனை விமானத்தில் பயணம் செய்த சக பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என விமான சேவை இயக்குனர் கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்