பிரான்சில் உள்ள தேவாலயத்தில் வழங்கப்படும் புனித நீரில் விஷமா? பரிசோதனையில் ஆபத்தானது என அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்
239Shares
239Shares
lankasrimarket.com

பிரான்சில் உள்ள தேவாலயத்தில் வழங்கப்படும் புனித நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால், பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Notre-Dame de Paris தேவாலயத்தில் வழங்கப்படும் புனித நீரை பல்வேறு சுற்றுலாப்பயணிகள் பருகியதால், தலைவலி, தலைச்சுற்று மற்றும் மயக்க நிலையை அடைந்ததாக கூறியுள்ளனர்.

இதனால் இது குறித்த சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து தேவாலயத்தின் பாதிரியார்கள் கூறுகையில், இது கெட்டது போன்ற வாசம் வீசுகிறது. அதனால் என்ன, உலகத்துக்கு விஷத்தை பருக்கவேண்டி அவர்கள் பணிக்கப்பட்டுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

உடனடியாக புனித நீரினை பொலிசார் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள். பரிசோதனையில் இந்த நீர் பருகுவதற்கு உகந்தது அல்ல எனவும், மிக ஆபத்தான நீர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்