அட்டகாசமான ஸ்னாப்சாட் கண்ணாடி: வாங்க நீங்கள் தயாரா?

Report Print Givitharan Givitharan in கஜெட்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

இணையத்தில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்கள் எல்லாம் தற்போது இலத்திரனியல் சாதனங்களை அறிமுகம் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதற்கு கூகுள் நிறுவனம், பேஸ்புக் நிறுவனம் போன்றவற்றினை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இவற்றின் வரிசையில் தற்போது Snapchat நிறுவனமும் இணைந்துள்ளது.

இந் நிறுவனமானது இணையத்தினூடு நண்பர்களுடன் இலகுவாக பேசிக்கொள்ளும் வசதியையும், உலகெங்கிலும் இடம்பெறும் செய்திகளை உடனுக்கு உடன் அறிந்துகொள்ளும் வசதியையும் தருகின்றது.

கடந்த செப்டெம்பர் மாதம் Snapchat நிறுவனம் விசேட கண்ணாடி ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.

Snapchat Spectacles எனும் இக் கண்ணாடிகளின் ஊடாக புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும்.

அவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களை எந்தவித மொபைல் சாதனங்களின் உதவியும் இன்றி நேரடியாகவே Snapchat இல் தரவேற்றம் செய்துகொள்ள முடியும்.

மேலும் இதன் உதவியுடன் 10 செக்கன்கள் வரையிலான வீடியோக்களையும் பதிவு செய்துகொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்.

கடந்த செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள போதிலும் தற்போதே பயனர்கள் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கின்றது.

இதன் விலையானது 130 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments